'தி பாரடைஸ்' படத்தில் நானிக்கு ஜோடியாக நடிக்கும் பிரபல நடிகை

1 month ago 8

சென்னை,

தெலுங்கில் முன்னணி நடிகராக இருப்பவர் நானி. வித்தியாசமான கதைகளை தேர்ந்தெடுத்து நடிப்பதில் ஆர்வம் உடையவர். தற்போது இயக்குனர் சைலேஷ் கொலனு இயக்கத்தில் 'ஹிட் 3' படத்தில் நானி நடித்து வருகிறார். அதுமட்டுமில்லாமல், தசரா படத்தை இயக்கிய ஸ்ரீகாந்த் ஒடேலா இயக்கத்தில் 'தி பாரடைஸ்' படத்திலும் நடித்து வருகிறார்.

எஸ்.எல்.வி. சினிமாஸ் தயாரிக்கும் இப்படத்திற்கு அனிருத் இசையமைக்கிறார். இதில் சோனாலி குல்கர்னி, மோகன் பாபு முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்க உள்ளனர். பிரம்மாண்டமான பொருட்செலவில் உருவாகும் இப்படம் அடுத்த ஆண்டு மார்ச் 26-ந் தேதி திரையரங்குகளில் வெளியாக உள்ளது. சமீபத்தில், இப்படத்தின் கிளிம்ப்ஸ் வெளியாகி வைரலானது. இதன் படப்பிடிப்பு பணிகள் தற்போது விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

இந்த நிலையில், இப்படத்தில் நானிக்கு ஜோடியாக நடிக்க உள்ள நடிகை குறித்த தகவல் வெளியாகி உள்ளது. அதன்படி, இப்படத்தில் நடிகை கீர்த்தி ஷெட்டி கதாநாயகியாக நடிப்பதற்கு ஒப்பந்தமாகி உள்ளார் என தகவல்கள் தெரிவிக்கின்றன. ஏற்கனவே கீர்த்தி ஷெட்டி நானியுடன் 'ஷியாம் சிங்க ராய்' என்ற படத்தில் இணைந்து நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. 

 

Read Entire Article