'தி கோட்': விஜய், சிவகார்த்திகேயன் நடித்த காட்சியின் படப்பிடிப்பு வீடியோ

3 months ago 22

சென்னை,

விஜய் - வெங்கட் பிரபு கூட்டணியில் பிரமாண்டமாக உருவாகி கடந்த மாதம் 5-ம் தேதி திரையரங்குகளில் வெளியான படம் 'தி கோட்'. யுவன் சங்கர் ராஜா இசையமைத்திருந்த இப்படத்தில் விஜய்யுடன் சிநேகா, மீனாட்சி சவுத்ரி, பிரசாந்த், மோகன், பிரபு தேவா, பிரேம்ஜி உள்ளிட்ட பலர் நடித்தனர்.

இப்படத்தில் விஜய், அப்பா மற்றும் மகன் என இரண்டு வேடங்களில் நடித்திருக்கிறார். மிகுந்த எதிர்பார்ப்புக்கு மத்தியில் வெளியான 'தி கோட்' படம் தற்போது வரை உலகம் முழுவதும் ரூ. 450 கோடிக்கு மேல் வசூல் செய்து இருப்பதாக கூறப்படுகிறது.

மேலும், இப்படத்தில் திரிஷா, சிவகார்த்திகேயன் ஆகியோர் கேமியோ ரோலில் நடித்தனர். இந்நிலையில், விஜய், சிவகார்த்திகேயன் நடித்த காட்சியின் படப்பிடிப்பு வீடியோவை படக்குழு வெளியிட்டுள்ளது. இந்த வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.

When #SK meets #Thalapathy , you know it's going to be legendary! You asked and we delivered ♥️#TheGoatBTS@actorvijay Sir @Siva_Kartikeyan A @vp_offl HeroA @thisisysr Magical #TheGreatestOfAllTime#ThalapathyIsTheGOAT#KalpathiSAghoram#KalpathiSGaneshpic.twitter.com/V60XCbTyzO

— AGS Entertainment (@Ags_production) October 5, 2024
Read Entire Article