தாவரவியல் பூங்கா புல்வெளியை பாதுகாக்க பாப் அப் முறையில் தண்ணீர் பாய்ச்சும் பணிகள் தீவிரம்

2 hours ago 1

ஊட்டி : பனியில் இருந்து புல் மைதானத்தை பாதுகாக்க பாப் அப் முறையில் தண்ணீர் தெளிக்கும் பணிகள் தாவரவியல் பூங்காவில் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. நீலகிரி மாவட்டத்தில் ஆண்டுதோறும் அக்டோபர் மாதம் இறுதி வாரத்திற்கு பின் உறைபனி விழும்.

இது போன்ற சமயங்களில் ஊட்டி மற்றும் புறநகர் பகுதிகளில் உள்ள தாழ்வான பகுதிகள், அணைகள், நீரோடைகள் போன்ற பகுதிகளில் உறைபனியின் தாக்கம் அதிகமாக காணப்படும்.

இச்சமயங்களில், அங்குள்ள செடி, கொடிகள் மற்றும் புற்கள் பனியில் கருகி விடும். கடந்த நான்கு மாதங்களுக்கு மேலாகவே உறைபனி காணப்படுகிறது.இதனால், புல்வெளிகள் மற்றும் சிறு செடி, கொடிகள் கருகி வருகின்றன. பொதுவாக டிசம்பர் மாதம் முதல் பிப்ரவரி மாதம் வரை விழும் உறைபனியில் ஊட்டி தாவரவயில் பூங்காவில் உள்ள புல் மைதானத்தில் உள்ள புற்கள் கருகி விடும்.

இதனை தடுக்க ஸ்பிரிங்கலர் மற்றும் பாப் அப் முறையில் புல் மைதானத்தில் தண்ணீர் தெளிக்கப்பட்டு பனியின் தாக்கத்தை குறைப்பது வழக்கம். தற்போது நீர் பனியின் தாக்கம் அதிகமாக காணப்படுகிறது. அவ்வப்போது உறைபனியும் காணப்படுகிறது. இதனால், புற்கள் மற்றும் செடி கொடிகள் கருகும் அபாயம் ஏற்பட்டுள்ளது.

இதனை தடுப்பதற்காக தற்போது பாப் அப் முறையில் தண்ணீர் தெளிக்கும் பணிகள் துவக்கப்பட்டுள்ளது. மேலும், தொட்டிகளில் வைக்கப்பட்டுள்ள மலர் செடிகள், பாத்திகளில் வைக்கப்பட்டுள்ள மலர் செடிகள் கருகாமல் இருக்க பிளாஸ்டிக் போர்வை கொண்டு பாதுகாக்கப்பட்டள்ளது.

எனினும், பகல் நேரங்களில் வெயிலின் தாக்கம் அதிகமாக உள்ளதால் இந்த மலர் செடிகள் வாடிவிடாமல் இருக்க நாள்தோறும் ஊழியர்கள் பாப் அப் மற்றும் ஸ்பிரிங்லர் மூலம் மூலம் தண்ணீர் பாய்ச்சும் பணிகளை மேற்கொண்டு வருகின்றனர்.

The post தாவரவியல் பூங்கா புல்வெளியை பாதுகாக்க பாப் அப் முறையில் தண்ணீர் பாய்ச்சும் பணிகள் தீவிரம் appeared first on Dinakaran.

Read Entire Article