திருப்பூர்: தாராபுரம் அருகே பாலப் பணிக்கு தோண்டிய குழியில் விழுந்து மே.3ம் தேதி 2 பேர் உயிரிழந்த நிலையில், 4 பேர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. ஒப்பந்ததாரர் சிவக்குமார், பொறியாளர் குணசேகரன், AE கணேஷ் , மேற்பார்வையாளர் கவுதம், உள்ளிட்டோர் மீது வழக்குப் பதிவாகி உள்ளது. சாலை நடுவே பாதி அளவுக்கு 8 அடி ஆழ பள்ளத்தில் நள்ளிரவு இருசக்கர வாகனத்தில் சென்ற நடராஜ், ஆனந்தி தம்பதி உயிரிழந்த நிலையில், 13 வயது மகள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.
The post தாராபுரம் அருகே சாலை பள்ளத்தில் விழுந்து 2 பேர் பலி – 4 பேர் மீது வழக்கு appeared first on Dinakaran.