தமிழ்நாடு பொறியியற் சேர்க்கைகான இணையதள விண்ணப்பப் பதிவு 07.05.2025 அன்று தொடங்கி வைக்கப்பட்டது. இது நாள் வரை 1,69,634 மாணவர்கள் விண்ணப்பபதிவு செய்துள்ளனர்.
இது குறித்து உயர்கல்வித்துறை அமைச்சர் முனைவர் கோவி.செழியன் தெரிவித்துள்ளதாவது: 07.05.2025 அன்று தமிழ்நாடு பொறியியல் சேர்க்கைகான இணையதள மற்றும் விண்ணப்பப்பதிவு தொடங்கப்பட்டது. இன்று (16.05.2025) மாலை 6.00 மணி நிலவரப்படி 1,69,634 மாணாக்கர்கள் விண்ணப்பப்பதிவு செய்துள்ளனர். இதில் 53,624 மாணவர்களும் 48,514 மாணவிகளும் ஆக மொத்தம் 1,02,138 மாணாக்கர்கள் விண்ணப்பக் கட்டணம் செலுத்தி உள்ளனர்.
மாணாக்கர்கள் www.tneaonline.org என்ற இணையதள முகவரியில் தங்களது பொறியியற் சேர்க்கைக்கான விண்ணப்பங்களை 06.06.2025 வரை பதிவு செய்து கொள்ளலாம். மாணாக்கர்களுக்கு ஏதேனும் விளக்கங்கள் தேவைப்படின் தமிழ்நாடு முழுவதும் 110 தமிழ்நாடு பொறியியற் மாணாக்கர் சேர்க்கை சேவை மையங்கள் (TFC Centres) நிறுவப்பட்டுள்ளன அந்த சேவை மையங்களை தொடர்பு கொள்ளலாம்.
மேலும், 1800-425-0110 என்ற கட்டணமில்லா தொலைபேசி வாயிலாகவோ அல்லது [email protected] என்ற மின்னஞ்சல் வாயிலாகவோ தொடர்பு கொண்டு தங்களது சந்தேகங்களை தெளிவுபடுத்திக் கொள்ளுமாறு கேட்டுக் கொள்கிறேன். இவ்வாறு உயர்கல்வித்துறை அமைச்சர் தெரிவித்துள்ளார்.
The post பொறியியல் சேர்க்கைகான விண்ணப்பப்பதிவு தொடங்கப்பட்ட 10 நாட்களில் 1,69,634 மாணவர்கள் பதிவு: அமைச்சர் கோவி.செழியன் தகவல் appeared first on Dinakaran.