தாய்லாந்து ஓபன் பேட்மிண்டன்: உன்னதி ஹூடா, மாள்விகா தோல்வி

4 hours ago 2

பாங்காக்,

தாய்லாந்து ஓபன் சர்வதேச பேட்மிண்டன் போட்டி பாங்காக்கில் நடந்து வருகிறது. இதில் பெண்கள் ஒற்றையர் பிரிவில் நேற்று நடைபெற்ற 2-வது சுற்றில் தரவரிசையில் 45-வது இடத்தில் உள்ள 17 வயது இந்திய வீராங்கனை உன்னதி ஹூடா, 2-ம் நிலை வீராங்கனையான போர்ன்பவீ சோச்சுவோங்குடன் (தாய்லாந்து) மோதினார். இந்த ஆட்டத்தில் உன்னதி ஹூடா 14-21, 11-21 என்ற நேர்செட்டில் 39 நிமிடங்களில் போர்ன்பவீ சோச்சுவோங்கிடம் தோல்வி கண்டு வெளியேறினார்.

மற்றொரு இந்திய வீராங்கனை மாள்விகா பான்சோத் 12-21, 16-21 என்ற நேர்செட்டில் முன்னாள் உலக சாம்பியன் ராட்சனோக் இன்டானோனிடம் (தாய்லாந்து) பணிந்தார். இதே போல் ஆகார்ஷி காஷ்யப் 9-21, 14-21 என்ற நேர்செட்டில் தாய்லாந்தின் சுபானிதா காதிதோங்கிடம் தோல்வியை தழுவினார். இதன் மூலம் இந்த போட்டியில் இந்தியாவின் சவால் முடிவுக்கு வந்தது.

Read Entire Article