தாய்லாந்தில் நடந்த தீவிபத்தில் படுகாயமடைந்த தமிழருக்கு உயர் சிகிச்சை அமைச்சர் நாசர் உத்தரவு

1 month ago 6

சென்னை: மயிலாடுதுறை மாவட்டம் நீடுரை சேர்ந்தவர் முபாரக் அலி. தாய்லாந்தில் பணியாற்றி வந்த அவர், கடந்த மே மாதம் நிகழ்ந்த விபத்தில் சிக்கி காயமடைந்தார். இவரை சிகிச்சைக்காக தமிழகம் அழைத்து வர உதவுமாறு அவரது மனைவி முதல்வருக்கு கோரிக்கை வைத்தார். இதனை ஏற்ற முதல்வர் அவரை தாய்லாந்தில் இருந்து விமானத்தில் அழைத்து வருவதற்காக ரூ.10 லட்சம் ஒதுக்கீடு செய்தார்.

அதனை தொடர்ந்த கடந்த 17ம் தேதி நள்ளிரவு தாய்லாந்தில் இருந்து விமானம் மூலம் உயர் சிகிச்சைக்காக முபாரக் அலி சென்னை அழைத்து வரப்பட்டார். இந்நிலையில் சென்னை ராஜிவ்காந்தி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் முபாரக் அலியை சிறுபான்மையினர் நலன் மற்றும் அயலகத் தமிழர் நலத்துறை அமைச்சர் சா.மு.நாசர் நேரில் சென்று நலம் விசாரித்தார். பின்னர் அவருக்கு தேவையான உரிய சிகிச்சைகளை வழங்குமாறு மருத்துவர்களுக்கு அறிவுறுத்தியுள்ளார்.

 

The post தாய்லாந்தில் நடந்த தீவிபத்தில் படுகாயமடைந்த தமிழருக்கு உயர் சிகிச்சை அமைச்சர் நாசர் உத்தரவு appeared first on Dinakaran.

Read Entire Article