சென்னை: “தாய்மொழிக் கல்வியை ஊக்கப்படுத்துகின்ற ‘புதிய கல்விக் கொள்கையை’ ஏற்படுத்திக் கொடுத்த நமது பிரதமர் மோடிக்கு, எனது மனமார்ந்த நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.” என மத்திய இணையமைச்சர் எல்.முருகன் தெரிவித்துள்ளார்.
உலக தாய்மொழி தினம் இன்று அனுசரிக்கப்படுகிறது. இந்நிலையில், இது குறித்து அவர் தனது எக்ஸ் தளத்தில், “உலகம் முழுவதும் இருக்கின்ற அனைத்து மக்களும், தங்களது தாய்மொழியை போற்றுகின்ற வண்ணம், இன்றைய தினமானது ‘உலக தாய்மொழி’ தினமாக கொண்டாடப்படுகிறது.