தாயுடன் மகா கும்பமேளாவில் புனித நீராடிய நடிகர் விஜய் தேவரகொண்டா

3 months ago 13

லக்னோ,

உத்தரபிரதேசத்தின் பிரயாக்ராஜில் உள்ள திரிவேணி சங்கமத்தில் மகா கும்பமேளா மிகவும் கோலாகலமாக நடந்து வருகிறது. கடந்த மாதம் 13-ந் தேதி தொடங்கிய இந்த நிகழ்வில் இதுவரை 40 கோடிக்கும் அதிகமான பக்தர்கள் புனித நீராடி உள்ளனர்.

உலகின் மிகப்பெரிய இந்த கலாசார, ஆன்மிக நிகழ்வில் பல நடிகை நடிகர்களும் புனித நீராடி வருகின்றனர். அந்தவகையில், நேற்று நடிகர் விஜய் தேவரகொண்டா தனது தாயுடன் புனித நீராடினார்.

இது தொடர்பான புகைப்படம் வெளியாகி வைரலாகி வருகிறது. விஜய் தேவரகொண்டா தற்போது தனது 12-வது படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தின் டைட்டில் டீசர் வருகிற 12-ம் தேதி வெளியாக உள்ளது.

தாயுடன் மகாகும்பமேளாவில் புனித நீராடிய நடிகர் விஜய் தேவரகொண்டா#VijayDeverakonda | #MahaKumbh2025 | #PrayagrajMahakumbh2025 | #ThanthiTV pic.twitter.com/osYGMqdQI7

— Thanthi TV (@ThanthiTV) February 10, 2025
Read Entire Article