'தாயின் அன்பை யாராலும் ஈடுசெய்ய முடியாது' - பிரபல நடிகர் பேச்சு

1 week ago 1

சென்னை,

தெலுங்கு சினிமாவில் முன்னணி நடிகராக இருப்பவர் நந்தமுரி கல்யாண் ராம். இவர் பிரபல நடிகர் நந்தமுரி ஹரிகிருஷ்ணாவின் மகன் ஆவார். நந்தமுரி கல்யாண் ராம் நடித்த அதானொக்கடே, ஹரே ராம், 118 போன்ற அதிரடித் திரைப்படங்கள் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றன.

தற்போது இவர் தனது 21-வது படத்தில் நடித்து முடித்துள்ளார். இப்படத்திற்கு அர்ஜுன் s/o வைஜெயந்தி எனப்பெயரிடப்பட்டுள்ளது. நடிகை விஜயசாந்தி, நடிகர்கள் சோஹல் கான் மற்றும் ஸ்ரீகாந்த் ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்திருக்கின்றனர்.

இப்படம் வருகிற 18-ம் தேதி வெளியாக உள்ளது. இந்நிலையில், ஒரு தாயின் அன்பை யாராலும் ஈடுசெய்ய முடியாது என்று கல்யான் ராம் கூறி இருக்கிறார். அவர் கூறுகையில், 

"பெண்களை மதிப்பது பாதுகாப்பதும் நமது பொறுப்பு. ஒரு தாயின் அன்பை யாராலும் ஈடுசெய்ய முடியாது. தயவுசெய்து அவர்கள் மீது எரிச்சலைக் காட்டாதீர்கள். வாழ்க்கையில் நாம் எதை சாதித்தாலும் அது நம் தாயால்தான். அவர்கள் இல்லாமல், நாம் ஒன்றுமில்லை. அர்ஜுன் S/O வைஜெயந்தி தாய்மார்கள் செய்த தியாகங்களை காட்டுகிறது' என்றார்.


Read Entire Article