தாம்பரம்: தாம்பரத்தில் உள்ள இந்திய விமானப்படை நிலையத்தில் பாதுகாப்பு அமைச்சகம் சார்பில் முன்னாள் படை வீரர்களுக்கான வேலை வாய்ப்பு முகாம் நேற்று நடைபெற்றது. இதில் 50க்கும் மேற்பட்ட கார்பரேட் நிறுவனங்கள் கலந்து கொண்டு முன்னாள் படை வீரர்களை பணிகளுக்கு தேர்வு செய்தனர்.நிகழ்ச்சியில் பாதுகாப்பு அமைச்சகத்தின் முன்னாள் படை வீரர்கள் நலன் துறை செயலாளர் டாக்டர் நித்தின் சந்திரா கலந்துகொண்டு தேர்ந்தெடுக்கப்பட்ட முன்னாள் படை வீரர்களுக்கு பணி ஆணைகளை வழங்கினார்.பின்னர் அவர் நிருபர்களிடம் கூறியதாவது:இந்த முகாமில் பாதுகாவலர் முதல் மேலாண்மை பணிகள் வரை 500 பணியிடங்களுக்கு முன்னாள் படை வீரர்கள் தேர்வு செய்யப்பட்டு இருக்கிறார்கள். 50க்கும் மேற்பட்ட மேலாண்மை பதவிகளில் முன்னாள் படை வீரர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர்.இவ்வாறு அவர் தெரிவித்தார்.
The post தாம்பரம் விமானப்படை நிலையத்தில் முன்னாள் படை வீரர்களுக்கு வேலைவாய்ப்பு முகாம் appeared first on Dinakaran.