தாம்பரம் மார்க்கெட்டில் சுகாதாரமற்ற 1000 முட்டைகள் அழிப்பு

1 month ago 5

தாம்பரம், நவ. 21: தாம்பரம் சண்முகம் சாலைமார்க்கெட்டில் நேற்று உணவு பாதுகாப்புத்துறை மற்றும் தாம்பரம் மாநகராட்சி சுகாதார பிரிவினர் ஆய்வு செய்தனர். அப்போது ஒரு முட்டை கடையில் ஓட்ட முட்டைகளை கொள்முதல் செய்து விற்றது தெரிய வந்தது. ஓட்ட முட்டைகள் விற்பனை செய்யப்பட்டு வந்ததால் அப்பகுதி முழுவதும் சுகாதாரமற்ற முறையில் இருந்ததோடு கடும் துர்நாற்றம் வீசியது. இதையடுத்து சுமார் 1,000 ஓட்ட முட்டைகளை பறிமுதல் செய்த அதிகாரிகள் அவற்றை அழித்தனர். பின்னர்அந்த கடைக்கு சீல் வைத்ததோடு ₹6 ஆயிரம் அபராதம் விதித்தனர். கடை மீது உணவு பாதுகாப்பு மற்றும் தர நிர்ணயச் சட்டம் 2006 பிரிவு 58ன் கீழ் வழக்கும் தொடரப்பட்டுள்ளது.

The post தாம்பரம் மார்க்கெட்டில் சுகாதாரமற்ற 1000 முட்டைகள் அழிப்பு appeared first on Dinakaran.

Read Entire Article