தாம்பரம் மாநகராட்சி: மழை தொடர்பான புகார்கள் அளிக்க 24 மணி நேரமும் இயங்கும் கட்டுப்பாட்டு அறை அமைப்பு

6 months ago 37

சென்னை,

வடகிழக்கு பருவமழை நாளை (செவ்வாய்க்கிழமை) தொடங்குகிறது. இதையொட்டி சென்னை உள்பட 4 மாவட்டங்களுக்கு மிக கனமழைக்கான எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் மிக கனமழை எச்சரிக்கையைத் தொடர்ந்து மழையை எதிர்கொள்ள எடுக்கப்பட்டுள்ள முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் சென்னை தலைமைச் செயலகத்தில் ஆய்வுக் கூட்டம் நடைபெற்றது.இந்த ஆய்வுக் கூட்டத்தில் துணை முதல்-அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், தலைமைச் செயலாளர், அரசு உயர் அதிகாரிகள் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

இந்நிலையில் தாம்பரம் மாநகராட்சியில் மழை தொடர்பான புகார்கள் அளிக்க 24 மணி நேரமும் இயங்கும் கட்டுப்பாட்டு அறை அமைக்கப்பட்டுள்ளது. இதன்படி மழை தொடர்பான புகார்கள் அளிக்க 18004254355, 18004251600 என்ற கட்டணமில்லா தொலைபேசி மற்றும் 8438353355 என்ற வாட்ஸ்அப் வழியே தொடர்பு கொள்ளலாம் என்று அறிவிப்பு வெளியாகி உள்ளது. 

Read Entire Article