சென்னை,
பொங்கல் பண்டிகையை முன்னிட்டு தாம்பரம்-நெல்லை இடையே சிறப்பு ரெயில் இயக்கப்படும் என தெற்கு ரெயில்வே அறிவித்திருந்தது. இந்த நிலையில் அந்த ரெயில் தாம்பரத்தில் இருந்து புறப்படும் நேரம் மாற்றம் செய்யப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளது. இதுகுறித்து தெற்கு ரெயில்வே வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-
தாம்பரத்தில் இருந்து வரும் 13, 20, 27 ஆகிய தேதிகளில் (திங்கட்கிழமை) மதியம் 3.30 மணிக்கு புறப்பட்டு நெல்லை செல்லும் பொங்கல் சிறப்பு ரெயில் (வண்டி எண்.06091), மறுநாள் அதிகாலை 4.55 மணிக்கு நெல்லை சென்றடையும் என ஏற்கனவே அறிவிக்கப்பட்டிருந்தது. தற்போது இந்த ரெயில் தாம்பரத்தில் இருந்து புறப்படும் நேரம் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.
அந்தவகையில், தாம்பரத்தில் இருந்து மதியம் 2.30 மணிக்கு புறப்பட்டு நெல்லை செல்லும் சிறப்பு ரெயில் செங்கல்பட்டுக்கு மதியம் 2.58 மணிக்கும், மேல்மருவத்தூருக்கு மாலை 3.23 மணிக்கும், விழுப்புரத்திற்கு 5.15 மணிக்கும், விருத்தாச்சலத்திற்கு 6.13 மணிக்கும், அரியலூருக்கு 7 மணிக்கும், ஸ்ரீரங்கத்திற்கு 7.53 மணிக்கும், திருச்சிக்கு 8.35 மணிக்கு என புதிய நேர அட்டவணைப்படி இயக்கப்படும். எஞ்சிய ரெயில் நிலையங்களுக்கு பழைய நேர அட்டவணைப்படி ரெயில் இயக்கப்படும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.