
மும்பை,
18-வது ஐ.பி.எல். தொடர் இந்தியாவின் பல்வேறு நகரங்களில் சிறப்பாக நடைபெற்று வந்தது. கடந்த மார்ச் 22-ம் தேதி தொடங்கிய இந்த தொடர் இந்தியா- பாகிஸ்தான் நாடுகள் இடையே போர் பதற்றம் அதிகரித்ததால் ஒரு வாரம் நிறுத்தி வைக்கப்பட்டது. தற்போது இந்தியா - பாகிஸ்தான் இடையே நீடித்த போர்ப்பதற்றம் முடிவுக்கு வந்ததால் நிறுத்தி வைக்கப்பட்ட ஐ.பி.எல். தொடர் மீண்டும் தொடங்க உள்ளது. இன்னும் 13 லீக் உள்பட 17 ஆட்டங்கள் எஞ்சியுள்ளன.
தற்போதைய நிலவரப்படி புள்ளி பட்டியலில் குஜராத் டைட்டன்ஸ் அணி முதலிடத்திலும், ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி 2-வது இடத்திலும், பஞ்சாப் கிங்ஸ் 3-வது இடத்திலும், மும்பை இந்தியன்ஸ் 4-வது இடத்திலும் உள்ளன. சென்னை சூப்பர் கிங்ஸ், ராஜஸ்தான் ராயல்ஸ் மற்றும் சன்ரைசர்ஸ் ஐதராபாத் ஆகிய அணிகள் பிளே ஆப் சுற்று வாய்ப்பை இழந்து விட்டன.
இந்நிலையில் இந்த தொடரில் கோப்பையை வெல்லப்போகும் அணி குறித்து இந்திய முன்னாள் வீரரான முகமது கைப் தனது கணிப்பினை வெளிப்படுத்தியுள்ளார்.
அவரது கணிப்பின் படி, ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி இம்முறை கோப்பையை வெல்லும் என்று கூறியுள்ளார்.