
தாம்பரம் , சென்னை கடற்கரை இடையே மின்சார ரெயில்கள் இயக்கப்பட்டு வருகின்றன. தினமும் லட்சக்கணக்கான மக்கள் இதில் பயணித்து வருகின்றனர். இந்நிலையில், இன்று காலை தாம்பரம் - கடற்கரை மின்சார ரெயில் சேவையில் பாதிப்பு ஏற்பட்டது. இதனால் ரெயில்கள் தாமதமாக வந்தன.
கடற்கரையில் இருந்து தாம்பரம் சென்ற மின்சார ரெயிலில் 6வது பெட்டியில் புகை வந்ததால் பல்லாவரத்தில் ரெயில் நிறுத்தப்பட்டது. இதனால் அந்த வழித்தடத்தில் சென்ற ரெயில்கள் அனைத்தும் நிறுத்தப்பட்டன. பின்னர் நீண்ட தாமதத்திற்குப்பின் ரெயில் சேவை தொடங்கியது.
ரெயில்கள் தாமதமாக வந்ததால் அலுவலகம் செல்வோர் உள்பட பல்வேறு தரப்பு பயணிகளும் கடும் அவதியடைந்தனர்.