தாடி வைத்த இஸ்லாமிய காவலரை பணிநீக்கம் செய்த விவகாரம் - மதுரை ஐகோர்ட்டு கிளை அதிரடி உத்தரவு

6 months ago 18

மதுரை,

மதுரையைச் சேர்ந்த அப்துல் காதர் இப்ராஹிம் என்ற காவலர், பணியின்போது தாடி வைத்திருந்ததால், அவருக்கு பணி மற்றும் ஊதிய உயர்வு நிறுத்தி வைக்க பட்டது. பின்னர் இது குறித்து அவர் விடியோ வெளியிட்டதால், அப்துல் காதரை பணியில் இருந்து நீக்கி அப்போதைய தமிழ்நாடு காவல் துறை இயக்குநர் சைலேந்திர பாபு உத்தரவு பிறப்பித்தார்.

இதை எதிர்த்து மதுரை ஐகோர்ட்டு கிளையில் அப்துல் காதர் மனு தாக்கல் செய்தார். அவரது மனுவை விசாரித்த நீதிபதி, இந்த விவகாரத்தில் காவலருக்கு சிறிய அளவிலான தண்டனை வழங்கலாம் எனக் கூறி, அப்துல் காதரை பணிநீக்கம் செய்த உத்தரவை ரத்து செய்து உத்தரவிட்டிருந்தார்.

இந்த உத்தரவை ரத்து செய்யக்கோரி தமிழக உள்துறை செயலாளர் மற்றும் தமிழ்நாடு காவல்துறை தலைவர் சார்பில் மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்த மனு விசாரணைக்கு வந்தபோது, காவலர் அப்துல் காதர் இப்ராஹிம் மீதான விவகாரத்தில் மட்டும் உட்சபட்ச தண்டனை வழங்கப்பட்டுள்ளது என்று கூறி, மேல்முறையீட்டு மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டனர். 

Read Entire Article