'தாக்குதல் நிறுத்தத்தை உண்மையாக செயல்படுத்துவதில் உறுதியாக உள்ளோம்' - பாகிஸ்தான் வெளியுறவுத்துறை

1 day ago 3

இஸ்லாமாபாத்,

பஹல்காம் தாக்குதலை தொடர்ந்து இந்திய ராணுவம் 'ஆபரேஷன் சிந்தூர்' என்ற பெயரில் தாக்குதல் பாகிஸ்தான் மற்றும் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் பகுதியில் உள்ள 9 பயங்கரவாத முகாம்களை தாக்கி அழித்தது. இதனால் இரு நாடுகளுக்கும் இடையே போர் பதற்றம் நிலவி வருகிறது.

இந்திய ராணுவத்தின் 'ஆபரேஷன் சிந்தூர்' நடவடிக்கையை தொடர்ந்து இந்தியா-பாகிஸ்தான் இடையே போர் பதற்றம் அதிகரித்த நிலையில், எல்லையில் அத்துமீறி இந்திய பகுதிகளை குறிவைத்து கடந்த சில தினங்களாக பாகிஸ்தான் தாக்க முயற்சித்தது.

இந்த தாக்குதல் முயற்சிகளை இந்திய ராணுவம் தொடர்ந்து முறியடித்து வந்தது. இந்த நிலையில், தொடர்ச்சியான பேச்சுவார்த்தைகளுக்கு பிறகு இந்தியாவும், பாகிஸ்தானும் போர் நிறுத்தத்திற்கு ஒப்புக்கொண்டதாக அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் நேற்று முன் தினம் அறிவித்தார்.

இதை இந்திய அரசும், பாகிஸ்தான் அரசும் உறுதி செய்தன. ஆனால் நேற்று முன் தினம் இரவு போர் நிறுத்த ஒப்பந்தத்தை மீறி இந்திய எல்லைக்குள் பாகிஸ்தான் ராணுவம் அத்துமீறி டிரோன் தாக்குதல் நடத்தியது. இந்த தாக்குதலை இந்தியாவின் வான் பாதுகாப்பு அமைப்பு வெற்றிகரமாக முறியடித்தது.

போர் நிறுத்தம் செய்த சில மணி நேரத்திலேயே, உடன்பாட்டை மீறி தாக்குதல் நடத்திய பாகிஸ்தான், இந்தியாவின் கடும் கண்டனத்தை பெற்றது. உறுதியான நடவடிக்கை எடுக்க இந்திய வெளியுறவுத்துறை வலியுறுத்தியது.

இந்த நிலையில், போர் நிறுத்த நடவடிக்கையில் உறுதியாக இருப்பதாக பாகிஸ்தான் அறிவித்து உள்ளது. அது தொடர்பாக வெளியுறவு செய்தித் தொடர்பாளர் ஒருவர் கூறும்போது, 'பாகிஸ்தானுக்கும், இந்தியாவுக்கும் இடையிலான போர் நிறுத்தத்தை உண்மையாக செயல்படுத்துவதில் பாகிஸ்தான் உறுதியாக உள்ளது. பாகிஸ்தானின் படையினர் பொறுப்புடனும், நிதானத்துடனும் நிலைமையைக் கையாள்கின்றனர்' என்று கூறினார்.

Read Entire Article