
சென்னை,
பஹல்காம் தாக்குதலை தொடர்ந்து இந்திய ராணுவம் 'ஆபரேஷன் சிந்தூர்' என்ற பெயரில் தாக்குதல் பாகிஸ்தான் மற்றும் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் பகுதியில் உள்ள 9 பயங்கரவாத முகாம்களை தாக்கி அழித்தது. இதனால் இரு நாடுகளுக்கும் இடையே போர் பதற்றம் நிலவி வருகிறது.இந்திய ராணுவத்தின் 'ஆபரேஷன் சிந்தூர்' நடவடிக்கையை தொடர்ந்து இந்தியா-பாகிஸ்தான் இடையே போர் பதற்றம் அதிகரித்த நிலையில், எல்லையில் அத்துமீறி இந்திய பகுதிகளை குறிவைத்து கடந்த சில தினங்களாக பாகிஸ்தான் தாக்க முயற்சித்தது. இந்த தாக்குதல் முயற்சிகளை இந்திய ராணுவம் தொடர்ந்து முறியடித்து வந்தது.இந்த நிலையில், தொடர்ச்சியான பேச்சுவார்த்தைகளுக்கு பிறகு இந்தியாவும், பாகிஸ்தானும் போர் நிறுத்தத்திற்கு ஒப்புக்கொண்டதாக அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் நேற்று அறிவித்தார். இதை இந்திய அரசும், பாகிஸ்தான் அரசும் உறுதி செய்தன.
இந்த நிலையில், தாக்குதல் நிறுத்த அறிவிப்புகள் அனைத்தும் புரியாத புதிராகவே உள்ளது என மத்திய முன்னாள் நிதி மந்திரி ப.சிதம்பரம் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் கூறியதாவது ,
இந்தியா - பாகிஸ்தான் தாக்குதல் நிறுத்த அறிவிப்புகள் அனைத்தும் புரியாத புதிராகவே உள்ளன. பாகிஸ்தான் ராணுவத்துடன் பிற்பகல் 3.35 மணிக்கு பேசி தாக்குதல் நிறுத்தம் முடிவு செய்யப்படுகிறது. அமெரிக்க அதிபர் தாக்குதல் நிறுத்த அறிவிப்பை மாலை 5.25 மணிக்கு தெரிவித்தார்.
தாக்குதல் நிறுத்தத்தை இந்திய வெளியுறவுச் செயலாளர் விக்ரம் மிஸ்ரி மாலை 6 மணிக்கு அறிவிக்கிறார்.தாக்குதல் நிறுத்த அறிவிப்பு நேரங்களில் குழப்பம் உள்ளது. டிரம்ப் குறித்து விக்ரம் மிஸ்ரி குறிப்பிடவே இல்லை.என தெரிவித்துள்ளார் .