
ஆறுபடை வீடுகளில் நான்காம் படை வீடான அருள்மிகு சுவாமிமலை சுவாமிநாதசுவாமி திருக்கோவிலில் வருடா வருடம் சித்திரை மாதத்தில் சித்திரை பெருவிழா நடைபெறுவது வழக்கம். அதேபோல் இந்த ஆண்டு சித்திரை பெருவிழா கடந்த 4-ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.
விழாவின் முக்கிய நிகழ்ச்சியான திருத்தேரோட்டம் இன்று காலை நடைபெற்றது. ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு வடம் பிடித்து தேர் இழுத்தனர். முக்கிய விதிகள் வழியாக தேர் வலம் வந்து நிலையை அடைந்தது. அதனை தொடர்ந்து தீர்த்தவாரி நடைபெற்றது.