தா.பேட்டை, நவ.8: திருச்சி மாவட்டம் தா.பேட்டையில் கந்த சஷ்டியை முன்னிட்டு சூரசம்ஹார விழா நடைபெற்றது. விழாவை முன்னிட்டு காசி விசாலாட்சி உடனமர் காசிவிஸ்வநாதர் கோவிலில் முகூர்த்த கால் நடுதல், மதுரைவீரன் சுவாமி கோவிலில் பூஜை செய்து கோவிலுக்கு வருதல், முருகப்பெருமானுக்கு பல்வேறு வாசனை திரவியங்கள் கொண்டு அபிஷேகங்கள் நடத்தப்பட்டு வழிபாடுகள் செய்யப்பட்டது.
அதனைத் தொடர்ந்து சக்திவேலை அம்பிகையிடம் பெற்றுக் கொண்ட முருகப்பெருமான் சிறப்பு அலங்காரத்தில் பல்லக்கில் ராஜவீதியில் எழுந்தருளி யானை முகசூரன், சிங்கமுகன், பானுகோபன், சூரபத்மன் ஆகிய அசுரர்களை வதம் செய்யும் நிகழ்ச்சி நடைபெற்றது. தேவர்படை, அசுரப்படை வேடமணிந்த பக்தர்கள் போரில் சண்டையில் ஈடுபட்ட காட்சி தத்ருபமாக நடந்தது. திரளான பக்கர்கள் அரோகரா, அரோகரா என்று விண்ணதிர கோஷம் எழுப்பினர். பின்னர் சிவாலயத்தில் எழுந்தருளிய முருகப் பெருமானுக்கு ஆராதனை நடைபெற்றது. விழாவில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்.
The post தா.பேட்டையில் சூரம்ஹார விழா கோலாகலம் சூரனை சம்ஹாரம் செய்தார் முருகன் appeared first on Dinakaran.