தவெக சார்பில் இன்று இப்தார் நோன்பு நிகழ்ச்சி: விஜய் பங்கேற்பு

2 days ago 2

சென்னை,

ரமலான் மாதத்தையொட்டி, தவெக சார்பில் சென்னை ராயப்பேட்டையில் உள்ள ஒய்.எம்.சி.ஏ., அரங்கத்தில் இன்று இப்தார் நோன்பு திறப்பு நிகழ்ச்சி நடைபெறவுள்ளது. இதற்கான முன்னேற்பாடுகளை தவெக பொதுச்செயலாளர் ஆனந்த் மற்றும் அக்கட்சியின் தேர்தல் பிரசார மேலாண்மை பொதுச்செயலாளர் ஆதவ் அர்ஜுன் ஆகியோர் மேற்பார்வையிட்டனர்.

அப்போது பேசிய புஸ்ஸி ஆனந்த், இப்தார் நோன்பு திறப்பு நிகழ்ச்சியில் விஜய் கலந்து கொள்ள இருப்பதாகவும், சுமார் 3 ஆயிரம் பேர் இந்த நிகழ்ச்சியில் பங்கேற்பார்கள் என்றும் தெரிவித்தார்.

மேலும், இந்த நிகழ்ச்சியில் பங்கேற்க மாவட்டத்திற்கு 5 இஸ்லாமிய நிர்வாகிகளுக்கு தவெக அழைப்பு விடுத்துள்ளது.

Read Entire Article