தவளக்குப்பத்தில் அவலம் பஸ்நிறுத்தம் அருகே மலைபோல் தேங்கும் குப்பை

2 months ago 11

*துர்நாற்றத்தால் பொதுமக்கள் அவதி

தவளக்குப்பம் : தவளக்குப்பம் பேருந்து நிறுத்தத்தில் கொட்டப்படும் குப்பை, கழிவுகளால் ஏற்படும் துர்நாற்றம் மற்றும் சுகாதார சீர்கேட்டால் பொதுமக்கள் அவதிக்குள்ளாகியுள்ளனர்,
தவளக்குப்பத்திலிருந்து அபிஷேகப்பாக்கம் வழியாக மடுகரை செல்லும் நான்குமுனை சந்திப்பில் பேருந்து நிறுத்தம் உள்ளது.

எப்போதும் பரபரப்பாக காணப்படும் இந்த பேருந்து நிறுத்ததில் அதிக பயணிகள், பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்கள், வேலைக்குச் செல்லும் தொழிலாளி முதல் வணிக ரீதியாக செல்வோர் வந்து செல்கின்றனர்.

இதனருகே கம்பெனி, உணவகங்கள், பூ கடை, பழக்கடை உள்ளிட்ட வணிகம் சார்ந்த நிறுவனங்கள் உள்ளது. பேருந்து நிறுத்தம் அருகே அரியாங்குப்பம் கொம்யூன் பஞ்சாயத்து மூலம் குப்பைகளை சேகரிக்க ஒரு குப்பை தொட்டி வைக்கப்பட்டுள்ளது.

இந்த குப்பைத்தொட்டி நளைக்கு, ஒரு இடத்தில் வைக்கப்படுகிறது. பின்னர் நாளடைவில் காணாமல் போய்விட்டது. இருப்பினும் குப்பை தொட்டி இல்லாத இடத்தில் வணிகர்கள் தொடர்ந்து குப்பையை கொட்டி வருகின்றனர். இதனால் அப்பகுதியில் சுகாதார சீர்கேடு ஏற்படுவதோடு, அருகில் பேருந்துக்கு காத்திருக்கும் பயணிகள் கடும் அவதிக்குள்ளாகின்றனர்.

The post தவளக்குப்பத்தில் அவலம் பஸ்நிறுத்தம் அருகே மலைபோல் தேங்கும் குப்பை appeared first on Dinakaran.

Read Entire Article