![](https://media.dailythanthi.com/h-upload/2025/02/07/38040357-jha.webp)
மும்பை,
பிரபல பாலிவுட் நடிகை ஜான்வி கபூர். இவர் சமீபத்தில் ஜூனியர் என்.டி.ஆர் நடிப்பில் வெளியான தேவரா பாகம் 1 படத்தில் கதாநாயகியாக நடித்து தென்னிந்திய சினிமாவில் அறிமுகமானார். இப்படத்தின் வெற்றிக்குப் பிறகு ஜான்வி கபூர், பல படங்களில் ஒப்பந்தமாகியுள்ளார், அதில் ஒன்று 'சன்னி சங்கரி கி துளசி குமாரி' .
வருண் தவான் கதாநாயகனாக நடிக்கும் இப்படத்தை கரண் ஜோஹர் தயாரிக்கிறார். ஜான்வியும், வருணும் இணைவது இதுவே முதல் முறை. ஷஷாங்க் கைதான் இப்படத்தை இயக்குகிறார். இப்படம் வரும் ஏப்ரல் 18-ம் தேதி திரைக்கு வரும் என்று முதலில் அறிவிக்கப்பட்ட நிலையில், தற்போது ரிலீஸ் தள்ளிப்போவதாக தகவல்கள் வெளியாகி இருக்கிறது.
படப்பிடிப்பில் ஏற்பட்ட தாமதம் காரணமாக படத்தின் ரிலீஸை தள்ளி வைக்க படக்குழு முடிவெடுத்திருப்பதாக தெரிகிறது. மறுபுறம், ஜான்வி கபூர், ராம் சரணுக்கு ஜோடியாக ஒரு படத்தில் நடித்து வருகிறார். புச்சி பாபு சனா இயக்கும் இப்படத்திற்கு ஏ.ஆர் ரகுமான் இசையமைக்கிறார்.