'தளபதி 69' படத்தின் கதை இதுதானா?

3 months ago 21

சென்னை,

நடிகர் விஜய் - எச் வினோத் கூட்டணியில் உருவாகும் படம் 'தளபதி 69'. இப்படத்திற்கு அனிருத் இசையமைக்கிறார். இதில் விஜய்யுடன், பூஜா ஹெக்டே, பாபி தியோல், மமிதா பைஜு, பிரகாஷ்ராஜ் உள்ளிட்ட பலர் நடிக்கின்றனர்.

இப்படம் அடுத்த ஆண்டு அக்டோபர் மாதம் வெளியாக உள்ளநிலையில், நேற்று முன்தினம் சென்னையில் இப்படத்தின் பூஜை நடைபெற்றது. இந்த பூஜையில் விஜய், பூஜா ஹெக்டே, இயக்குனர் எச். வினோத், பாபி தியோல், மமிதா பைஜு உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.

அதனைத்தொடர்ந்து, நேற்று இப்படத்தின் படப்பிடிப்பு துவங்கியது. இந்நிலையில், இப்படத்தின் கதை குறித்த தகவல் வெளியாகி உள்ளது. அதன்படி, தெலுங்கில் நந்தமுரி பாலகிருஷ்ணா நடிப்பில் கடந்த ஆண்டு வெளியான 'பகவந்த் கேசரி' படத்தின் ரீமேக் என கூறப்படுகிறது.

இத்திரைப்படத்தில், ஸ்ரீலீலா, காஜல் அகர்வால், பிரியங்கா ஜவால்கர், ராதிகா ரோஸ் மற்றும் அர்ஜுன் ராம்பா ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருந்தனர். இப்படம் வசூல் ரீதியில் வெற்றி பெற்றது என்பது மட்டுமில்லாம் பல சமூக செய்திகளையும் கொண்டிருந்தது.

'தளபதி 69' தான் விஜய்யின் கடைசி படம் என்பதால் வலுவான சமூக செய்தி இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இருப்பினும், இந்த தகவல் குறித்த அதிகாரப்பூர்வ உறுதிப்படுத்தல் எதுவும் வெளியிடப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

Read Entire Article