
தூத்துக்குடி,
தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூர் அருகே உள்ள கல்லாமொழியில் உடன்குடி அனல்மின்நிலையம் கட்டுமானப்பணிகள் நடந்து வருகிறது. அனல்மின் நிலையத்தில் முதல் யூனிட் பணிகள் முழுமையாக நிறைவடைந்த அடுத்த மாத இறுதியில் தொடங்கப்பட உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
இந்த நிலையில் உடன்குடி அனல்மின் நிலையத்திற்கு வெடிகுண்டு மிரட்டில் விடுக்கப்பட்டுள்ளது. அங்கு பணியில் இருந்த உதவி பொறியாளர் ஒருவரின் மெயிலுக்கு அனல்மின் நிலையத்தில் வெடிகுண்டு வைக்கப்பட்டுள்ளதாக தகவல் வந்துள்ளது. இதுகுறித்து போலீசுக்கு தெரிவித்த நிலையில், சம்பவ இடத்திற்கு வந்த வெடிகுண்டு நிபுணர்கள், மோப்பநாயுடன் நீண்ட நேரம் தேடுதல் வேட்டை நடத்தினர். நீண்ட நேர தேடுதலில் வெடிகுண்டு எதுவும் இல்லை என்று தெரியவந்தது. எனினும், போலீசார் இதுகுறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.