தலையில் ரத்தம் வடிய, கையில் பட்டா கத்தியுடன் மருத்துவமனைக்கு சிகிச்சை பெற சென்ற நபர்

6 months ago 37
காரைக்குடியில், தலையில் ரத்தம் வடிய, கையில் பட்டாக்கத்தியுடன் மருத்துவமனைக்கு ஒருவர் சிகிச்சை பெற வந்ததால் அங்கு பணியிலிருந்த செவிலியர்கள் அச்சம் அடைந்தனர். தகவலறிந்து வந்த போலீசார் சிவபாண்டியன் என்ற அந்த நபரிடமிருந்த பட்டா கத்தியை பறிமுதல் செய்து விசாரணை மேற்கொண்டனர். சொத்து பிரச்சினை காரணமாக தனது தம்பி பிரகதீஸ்வரன், கூட்டாளிகள் இருவருடன் சேர்ந்து தன்னை பட்டா கத்தியால் வெட்டியதாகவும், அந்த கத்தியை பறித்துக்கொண்டு சிகிச்சை பெற தான் மருத்துவமனைக்கு வந்ததாகவும் சிவபாண்டியன் கூறியதாக போலீசார் தெரிவித்தனர்.
Read Entire Article