அரியலூர், பிப். 12: தலைமைச் செயலகத்தை முற்றுகைப் போராட்டம் அறிவித்திருந்த நிலையில், அரியலூர் மாவட்ட டாஸ்மாக் பணியாளர்கள் 24 பேரை போலீசார் முன்னெச்சரிக்கையாக நேற்று கைது ெசய்தனர். பணி நிரந்தரம், அரசு பணியாளர்களுக்கு இணையான ஊதியம், ஓய்வூதியம் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி சென்னை தலைமை செயலகத்தை பிப்.11-ம் தேதி முற்றுகையிட்டு போராட்டம் நடத்தப்படும் என டாஸ்மாக் பணியாளர்கள் சங்கத்தினர் அறிவித்திருந்தனர். இந்நிலையில், முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக அரியலூர் மாவட்டத்தில் டாஸ்மாக் பணியாளர்கள் சங்கத்தினர் 24 பேரை நேற்று முன்தினம் இரவு முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக போலீசார் கைது செய்தனர்.
The post தலைமை செயலகம் முற்றுகை போராட்டம் அறிவித்த அரியலூர் மாவட்ட டாஸ்மாக் பணியாளர்கள் 24 பேர் கைது appeared first on Dinakaran.