தலைஞாயிறு அருகே புதிய மின்மாற்றி பொதுமக்கள் பயன்பாட்டிற்கு வந்தது

1 week ago 1

வேதாரண்யம்,ஜன.31: தலைஞாயிறு அருகே புதிய மின்மாற்றி பொதுமக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வரப்பட்டது. வேதாரண்யம் தாலுகா தலைஞாயிறு பேரூர் பிரிஞ்சுமூலை தோப்படிதெரு, மற்றும் கேசவன் ஓடைபகுதியில் குறைந்த மின் அழுத்தம் காரணமாக பொதுமக்கள் மின்சாதன பொருட்களை இயக்குவதில் நீண்ட காலமாக சிரமபட்டு வந்தனர். இந்த நிலையில் அங்கு குறைந்த மின் அழுத்ததை போக்க புதியதாக அமைக்கப்பட்டுள்ள 63 கிலோ வாட் மின்மாற்றி அமைக்கபட்டது. அதனை பொதுமக்கள் பயன்பட்டிற்கு தலைஞாயிறு பேரூர் திமுக செயலாளர் சுப்பிரமணியன் இயக்கி வைத்தார்.

நிகழ்ச்சியில் மின்வாரிய அலுவலர்கள் நாகை மாவட்ட திமுக விவசாய அணி துணை தலைவர் சுந்தரபிரபாகரன், வழக்கறிஞர் ஜெய்சங்கர், பேரூராட்சி மன்ற உறுப்பினர்கள் மல்லிகா நாகராஜன், அஜிஸ், கீர்த்திகா ராஜ்குமார் மற்றும் தலைஞாயிறு பேரூர் தகவல் தொழில்நுட்ப அணி ஒருங்கிணைப்பாளர் சரவணன், வார்டு கழக உறுப்பினர் பிரகாஷ் மற்றும் மின்சார வாரிய ஊழியர்கள் கலந்து கொண்டனர்.

The post தலைஞாயிறு அருகே புதிய மின்மாற்றி பொதுமக்கள் பயன்பாட்டிற்கு வந்தது appeared first on Dinakaran.

Read Entire Article