தலித் மக்கள் மீதான வன்முறை; 98 பேருக்கு ஆயுள் தண்டனை: கர்நாடக நீதிமன்றம் உத்தரவு

3 weeks ago 4

பெங்களூரு: கர்நாடகாவின் கொப்பல் மாவட்டத்தில் 2014ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் மரகும்பி கிராமத்தில் உள்ள தலித் மக்களுக்கும், மற்றொரு பிரிவினருக்கும் இடையே மோதலில் தலித் மக்களின் குடிசைகளுக்கு மற்றொரு பிரிவினர் தீ வைத்து எரித்தனர். இதில் 30 பேர் படுகாயமடைந்தனர். இந்த வழக்கை விசாரித்த கொப்பல் மாவட்ட செசன்ஸ் நீதிமன்றம், இது சாதிய வன்முறை.

இந்த வன்முறையில் 101 பேர் குற்றவாளிகள் என அறிவிக்கப்பட்டது. இவர்களில் 98 பேருக்கு தலா ரூ.5,000 அபராதத்துடன் ஆயுள் தண்டனையும், 3 பேருக்கு (தலித்) தலா ரூ.2,000 அபராதத்துடன் 5 ஆண்டுகள் கடுங்காவல் தண்டனை வழங்கப்பட்டது.

The post தலித் மக்கள் மீதான வன்முறை; 98 பேருக்கு ஆயுள் தண்டனை: கர்நாடக நீதிமன்றம் உத்தரவு appeared first on Dinakaran.

Read Entire Article