மதுரை: கோவையில் என்னை சுட்டு பிடிப்பதாக தகவல் பரவுகிறது. தற்போது எந்த வம்புக்கும் போவதில்லை. பேரன், பேத்திகளுடன் இருக்கிறேன் என, மதுரையில் ரவுடி வரிச்சியூர் செல்வம் கூறினார்.
கோவையில் பிரபல ரவுடி வரிச்சியூர் செல்வத்தை சுட்டுப் பிடிக்க, காவல்துறை உத்தரவிட்டதாக சில தகவல்கள் வெளியான நிலையில், மதுரையில் அவர் இன்று செய்தியாளர்களிடம் கூறியதாவது: 'தற்போது நான் எங்கும் செல்வதில்லை போலீசுக்கு கட்டுப்பட்டு நல்ல பிள்ளையாக எனது பேரன் பேத்திகளோடு சந்தோஷமாக வாழ்கிறேன். தவறான செய்தி வருகிறது. திருந்தி கல்யாணம், கச்சேரிக்கு போய்க்கொண்டிருக்கிறேன். நான் கோவைக்கு சென்று 13 ஆண்டுகளாகிவிட்டது. எனது நண்பர் செல்லையா என்பவர் உள்ளார். அவரிடம் செல்போனில் பேசுவேன். அமைதியாக இருந்தாலும் என் மீது அவதூறு பரப்புகின்றனர்.