
பெங்களூர்,
கர்நாடக வீட்டு வசதி மற்றும் சிறுபான்மை நலத்துறை மந்திரி ர் பிஎஸ் ஜாமீர் கான், பாகிஸ்தானுக்கு தற்கொலைப்படையாக செல்ல தயாராக இருப்பதாக பேசியிருக்கிறார். செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த ஜாமீர் கான் கூறியதாவது:- இந்தியாவின் எதிரியாக பாகிஸ்தான் எப்போதும் உள்ளது. பிரதமர் மோடியும், உள்துறை மந்திரி அமித்ஷாவும் அனுமதி அளித்தால் நான் களத்திற்கு செல்ல தயாராக இருக்கிறேன்.
மோடியும் அமித்ஷாவும் நாங்கள் இந்தியர்கள், இந்துஸ்தானியர்கள், பாகிஸ்தானுடன் நமக்கு எப்போதுமே உறவு இல்லை. நமது எதிரியாகவே அந்த நாடு எப்போதும் உள்ளது. மோடி மற்றும் அமித்ஷா, மத்திய அரசு அனுமதி அளித்தால் போருக்காக பாகிஸ்தான் செல்ல நான் தயராக இருக்கிறேன். எனக்கு ஒரு தற்கொலை வெடிகுண்டை மோடியும் அமித்ஷாவும் கொடுக்க வேண்டும். எனது உடலில் அதை கட்டிக்கொண்டு பாகிஸ்தானுக்கு சென்று அவர்களை தாக்குவேன்" என்றார். இந்தியா- பாகிஸ்தான் இடையே போர் பதற்றம் நிலவி வரும் கர்நாடக மந்திரியின் இந்த பேச்சு சமூக வலைத்த்ளங்களில் வைரலாகி வருகிறது.