தர்மபுரியில் பரவலாக மழை

6 months ago 28

தர்மபுரி, அக்.17: தர்மபுரி மாவட்டத்தில் கடந்த 2 நாட்களாக பரவலாக மழை பெய்து வருகிறது. தொடர்ந்து பெய்து வரும் மழையால், மாவட்டத்தில் பள்ளிகளுக்கு மட்டும் நேற்று விடுமுறை விடப்பட்டுள்ளது. நேற்று முன்தினம் காலை முதலே மழை விட்டு விட்டு பெய்து வருகிறது. இரவிலும் மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் பரவலாக மழை பெய்தது. இதனால் குளிர்ந்த சீதோஷண நிலை நிலவி வருகிறது. மேலும் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கையும் பாதிக்கப்பட்டுள்ளது. நேற்று காலை நிலவரப்படி மாவட்டத்தில் பதிவான மழை அளவு (மில்லி மீட்டரில்): தர்மபுரி- 12, பாலக்கோடு-39, மாரண்டஅள்ளி- 19, பென்னாகரம்- 15.4, ஒகேனக்கல்- 1.6, அரூர்- 23.2, பாப்பிரெட்டிப்பட்டி- 15, மொரப்பூர்- 3 என மொத்தம் 128.2 மில்லி மீட்டர் மழை பதிவாகியுள்ளது.

The post தர்மபுரியில் பரவலாக மழை appeared first on Dinakaran.

Read Entire Article