
லக்னோ,
உத்தரபிரதேச மாநிலம் அலிகார் மாவட்டத்தில் ஏவி ஏவியேஷன் என்ற தனியார் விமான பயிற்சி நிறுவனம் உள்ளது. இந்த நிறுவனத்தை சேர்ந்த சிறிய ரக விமானம் இன்று வழக்கமான பயிற்சியில் ஈடுபட்டது. அந்த விமானத்தை பயிற்சி விமானி பர்வ் ஜெயின் இயக்கினார்.
மாலை 3.10 மணியளவில் விமானத்தை தனிபூரில் உள்ள விமான ஓடுதளத்தில் தரையிறக்க விமானி முற்பட்டார். அப்போது எதிர்பாராத விதமாக விமான ஓடுதளம் அருகே அமைந்துள்ள சுவற்றின்மீது விமானம் மோதி விபத்துக்குள்ளானது.
இந்த சம்பவத்தில் விமானம் பலத்த சேதமடைந்தது. அதேவேளை, விபத்துக்கு சில வினாடிகளுக்குமுன் விமானி பர்வ் ஜெயின் விமானத்தில் இருந்து கீழே குதித்து உயிர் பிழைத்தார். இந்த சம்பவத்தில் விமானிக்கு சிறு காயம் ஏற்பட்டது. இந்த விபத்து குறித்து அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.