
தருமபுரி,
தருமபுரி மாவட்டம் அரூர் அருகே, தென்கரைக்கோட்டையைச் சேர்ந்தவர் திருமால். இவரது 17 வயது மகன் பெட்ரோல் பங்க் உரிமையாளர் ராமகிருஷ்ணன் என்பவரிடம், 6 நாட்கள் வேலை பார்த்துள்ளார். பின்னர் வேலையை விட்டு நின்ற சிறுவன், தனது மாமாவிடம் வேலைக்கு சேர்ந்துள்ளார். இது ராமகிருஷ்ணனுக்கு ஆத்திரத்தை ஏற்படுத்தியுள்ளது.
இதையடுத்து சிறுவனின் மாமாவிடம், ராமகிருஷ்ணன் சிறுவனை குறித்து தவறாக கூறியுள்ளார். இதுகுறித்து கேட்பதற்காக நேற்று சிறுவன் ராமகிருஷ்ணனின் பெட்ரோல் பங்கிற்கு சென்றுள்ளார். அப்போது ராமகிருஷ்ணன் சிறுவனை மரத்தில் கட்டி வைத்து, சாதி பெயரை சொல்லி கடுமையாக தாக்கியுள்ளார்.
இதில் காயமடைந்த சிறுவன் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். இந்த சம்பவம் தொடர்பாக A.பள்ளப்பட்டி காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது. இதையடுத்து பெட்ரோல் பங்க் உரிமையாளர் ராமகிருஷ்ணன் உள்ளிட்ட 4 பேர் மீது வன்கொடுமை தடுப்பு சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.