'தருணம்' திரைப்படத்தின் 'என்னை நீங்காதே நீ' வீடியோ பாடல் வெளியீடு

6 months ago 17

சென்னை.

'தேஜாவு' படத்தின் இயக்குனர் அரவிந்த் பஸ்ரீநிவாசன் இயக்கத்தில் உருவாகி வரும் திரைப்படம் 'தருணம்'. கிஷன் தாஸ் கதாநாயகனாக நடிக்கும் இப்படத்தில் அவருக்கு ஜோடியாக ஸ்மிருதி வெங்கட் நடிக்கிறார். ஜென் ஸ்டுடியோஸ் சார்பில் தயாரிப்பாளர் புகழ் தயாரிக்கும் இப்படத்திற்கு தர்புகா சிவா இசையமைக்கிறார்.

மேலும் இந்த படத்தில் பால சரவணன், ராஜ் அய்யப்பன், கீதா கைலாசம், ஸ்ரீஜா ரவி உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். ராஜா பட்டார்ஜி ஒளிப்பதிவாளராகவும், அருள் சித்தார்த் படத்தொகுப்பாளராகவும் பணியாற்றியுள்ள இப்படத்திற்க்கு தர்புகா சிவா பாடல்களுக்கான இசையும், அஸ்வின் ஹேமந்த் பிண்ணனி இசையும் மேற்கொண்டுள்ளனர்.

இத்திரைப்படம் பொங்கலை முன்னிட்டு வரும் ஜனவரி 14 ம் தேதி வெளியாகவுள்ளது.

இந்நிலையில் படத்தின் பாடலான 'என்னை நீங்காதே நீ' பாடலின் வீடியோ பாடல் தற்பொழுது வெளியாகியுள்ளது. இப்பாடலை மதன் கார்கி வரிகளில் கபில் கபிலன் மற்றும் பவித்ரா சாரி இணைந்து இப்பாடலை பாடியுள்ளனர்.

A very special song from @DarbukaSiva anna ❤️Watch the full video song by clicking on the link below!https://t.co/VyShiSxy3J#TharunamFromJan14 pic.twitter.com/7rpApzRzD8

— Kishen Das (@kishendas) January 4, 2025
Read Entire Article