தரிசனத்திற்கு வரும் பக்தர்களின் உயிரிழப்பை தடுக்க கூடுதல் கவனம் செலுத்தப்படும்: அமைச்சர் சேகர்பாபு பதில்

3 days ago 1

சென்னை: கோயில்களில் இறைபசியுடன் வயிற்றுப் பசியும் போக்கப்பட்டு வருகிறது என அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு தெரிவித்துள்ளார். அடிப்படை வசதிகள் செய்யப்பட்டுள்ளதால்தான், கோயில்களுக்கு பக்தர்களின் வருகை அதிகரித்துள்ளது. தரிசனத்திற்கு வரும் பக்தர்களின் உயிரிழப்பை தடுக்க கூடுதல் கவனம் செலுத்தப்படும். நெரிசல் காரணமாக திருச்செந்தூர், ராமேஸ்வரம், பழனி கோயில்களில் பக்தர்கள் உயிரிழக்கவில்லை. உடல்நலம் பாதிக்கப்பட்டிருந்த பக்தர்கள் தரிசனத்திற்கு வந்தபோது உயிரிழந்துள்ளனர் என பாஜக எம்எல்ஏ வானதி சீனிவாசன் எழுப்பிய கேள்விக்கு அமைச்சர் சேகர்பாபு பதில் அளித்துள்ளார்.

The post தரிசனத்திற்கு வரும் பக்தர்களின் உயிரிழப்பை தடுக்க கூடுதல் கவனம் செலுத்தப்படும்: அமைச்சர் சேகர்பாபு பதில் appeared first on Dinakaran.

Read Entire Article