பந்தலூர்: நீலகிரி மாவட்டம் நெல்லியாளம் நகராட்சிக்குட்பட்ட 19ம் வார்டு தேவாலா காட்டிமட்டம் பகுதியில் ஏராளமானோர் வசித்து வருகின்றனர். இப்பகுதியில் நிரந்தர அங்கன்வாடி மையம் இல்லாமல் இருந்து வந்தது. இதனால், கடந்த 2018ம் ஆண்டு பாராளுமன்ற உறுப்பினர் மேம்பாட்டு நிதி ரூ.10 லட்சம் மதிப்பீட்டில் அங்கன்வாடி மையம் கட்டப்பட்டுள்ளது. இந்த அங்கன்வாடி மையம் தரமில்லாமல் கட்டப்பட்டுள்ளதாக புகார் எழுந்துள்ளது.
மழைக்காலங்களில் மழைநீர் கசிவு ஏற்படுவதால் அங்கன்வாடி மையத்தில் குழந்தைகளை வைத்து பராமரிக்க முடியாத நிலை உள்ளது. இதனால் கட்டிடம் இருந்தும் பயன் இல்லாமல் இருந்து வருகிறது. தரமில்லாத கட்டிடத்தில் குழந்தைகளை வைத்து பராமரிக்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளதால், வாடகை கட்டிடத்தில் அங்கன்வாடி மையம் செயல்பட்டு வருகிறது. எனவே, சம்மந்தமாக அதிகாரிகள் உரிய ஆய்வு செய்து பயன் இல்லாமல் இருக்கும் கட்டிடத்தை பராமரிப்பு செய்து அங்கன்வாடி மையத்தை திறந்து செயல்படுத்த வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
The post தரமில்லாத அங்கன்வாடி மைய கட்டிடத்தை சீரமைத்து தர கோரிக்கை appeared first on Dinakaran.