
பெங்களூரு,
கர்நாடக மாநிலம் கலாபுரகியை சேர்ந்தவர் விகாஸ் (வயது 18) . இவர் பொறியியல் கல்லூடியில் படித்து வருகிறார். இதற்காக தங்கும் விடுதி ஒன்றில் 6 மாதமாக தங்கி இருந்தார். பின்னர் வேறு ஒரு விடுதிக்கு செல்ல முடிவு செய்தார்.
இந்த நிலையில் கூகுளில் தங்கும் விடுதி குறித்தி பதிவு ஒன்றை பதிவிட்டார். இந்த பதிவில் தங்கும் விடுதியில் கொடுக்கப்படும் உணவில் பூச்சிகள் இருப்பதாகவும் அங்கு உள்ள மோசமான சுகாதாரம் மற்றும் அசுத்தமான கழிப்பறைகள் போன்ற பிரச்சினைகள் உள்ளதாக கூறி பதிவிட்டார்.
இதனைக்கண்ட தங்கும் விடுத்தியின் உரிமையாளர் சந்தோஷ், விகாஸை மிரட்டியதாகவும் அந்த பதிவை நீக்குமாறும் கூறினார். இதற்கு விகாஸ் மறுப்பு தெரிவித்ததால் மார்ச் 17ம் தேதி அன்று தனது கூட்டாளிகளுடன் சென்று விகாஸை தாக்கியதாக கூறப்படுகிறது.
விடுதி உரிமையாளர் மற்றும் அவரது கூட்டாளிகள் மீது விகாஸ் போலீசில் புகார் அளித்தார். புகாரின் பேரில் போலீசார் அவர்களிடம் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.