தரங்கம்பாடி,பிப். 25: தரங்கம்பாடியில் கைவினைப் பொருட்கள் கண்காட்சி நடந்தது. தரங்கம்பாடியில் பெண்களால் தயாரிக்கபட்ட கைவினை பொருட்கள் கண்காட்சி நடைபெற்றது. கைவினை பொருள் செய்யும் பெண்கள் 10 பேருக்கு தொழிலை மேம்படுத்த நிதி உதவி அளிக்கபட்டது. அந்த நிதிக்கான காசோலையை பயணாளிகளுக்கு ஹோப் பவுண்டேசன் நிறுவனர் மும்பையை சேர்ந்த கியான் கொரியா முன்னிலையில் அவரது துணைவியார் ஜாப்ஸ்டியான் வழங்கினார். பள்ளிக்கு வருகை தந்த நிறுவனர் பள்ளிகளை பார்வையிட்டு பள்ளியில் பயிலும் முதல் வகுப்பிலிருந்து 10ம் வகுப்பு வரை உள்ள வகுப்புகளில் முதல் 3 இடங்களை பிடித்த மாணவர்களுக்கும், 10ம் வகுப்பு பொது தேர்வில் முதல் 3 இடங்களை பிடித்த மாணவ. மாணவிகளுக்கும் பரிசுகளை வழங்கினார். தொடர்ந்து 12 வருடமாக 10ம் வகுப்பு பொதுதேர்வில் 100 சதவிகிதம் தேர்ச்சி பெற்றதற்கு பாராட்டு தெரிவித்தார்.
The post தரங்கம்பாடியில் கைவினைப் பொருட்கள் கண்காட்சி appeared first on Dinakaran.