முதல்வரின் பெண் குழந்தைகள் பாதுகாப்பு திட்டத்தில் பயன்பெற விண்ணப்பிக்கலாம்

5 hours ago 2

 

திருச்சி, மே 26: முதல்வரின் பெண் குழந்தைகள் பாதுகாப்பு திட்டத்தின் கீழ் பயன்பெற பயனாளிகளுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.திருச்சி மாவட்டத்தில் சமூகநலன் மற்றும் மகளிர் உரிமைத்துறையின்  மூலம் முதலமைச்சரின் பெண் குழந்தைகள் பாதுகாப்பு திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. ஒன்று அல்லது இரண்டு பெண்குழந்தைகள் உள்ளவர்கள் பயன் பெறும் வகையில் விண்ணப்பம் செய்து பதிவு செய்து அதன்படி சேமிப்பு பத்திரம் பெற்று 18 வயது நிரம்பிய பிறகு இத்திட்டத்தின் முதிர்வு தொகை வழங்கப்பட்டு வருகிறது.

அதன்படி இத்திட்டத்தில் பதிவு செய்து பின்னர் 18 வயது முடிந்து மாவட்ட சமூகநல அலுவலகம் மூலம் அதற்கான முதிர்வு தொகை பெறாமல் பல விண்ணப்பங்கள் நிலுவையில் உள்ளன. அவ்வாறு 18 வயது முடிந்தும் பயன் பெறாமல் உள்ள பயனாளிகள் இவ்விளம்பரம் கண்டவுடன் திருச்சி கலெக்டர் அலுவலகம் 2ம் தளத்தில் உள்ள மாவட்ட சமூகநல அலுவலகத்தில் நேரடியாக வருகை தந்து உரிய பயன்களை பெற்று பயன்பெறலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த தகவலை திருச்சி மாவட்ட கலெக்டர் பிரதீப் குமார் தெரிவித்துள்ளார்.

The post முதல்வரின் பெண் குழந்தைகள் பாதுகாப்பு திட்டத்தில் பயன்பெற விண்ணப்பிக்கலாம் appeared first on Dinakaran.

Read Entire Article