திருவண்ணாமலை, மே 26: திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலுக்கு சொந்தமான 18 ஏக்கர் விளைநிலத்தில் சாகுபடி செய்யப்பட்டுள்ள நெல் அறுவடை தீவிரமாக நடந்து வருகிறது.
திருவண்ணாமலை அடுத்த நாயுடுமங்கலம் பகுதி தனகோட்டிபுரம் கிராமத்தில் அண்ணாமலையார் கோயிலுக்கு சொந்தமான 147 ஏக்கர் நிலம் உள்ளது. இங்குள்ள விளைநிலத்தில், அண்ணாமலையார் கோயில் நிர்வாகமே நேரடியாக ஆண்டுதோறும் நெல் சாகுபடி செய்து வருகிறது.
இந்நிலையில், தனகோட்டிபுரம் கிராமத்தில் உள்ள விளைநிலத்தில் சுமார் 18 ஏக்கர் பரப்பளவில் கோ- 51 சன்ன ரக நெல் சாகுபடி செய்யப்பட்டது. இந்த ஆண்டு பாசனத்துக்கு போதுமான தண்ணீர் இருந்ததால் நெல் செழித்து வளர்ந்து மகசூல் அதிகரித்துள்ளது.
இந்நிலையில், கடந்த 2 நாட்களாக அந்த பகுதியில் நெல் அறுவடை தீவிரமாக நடந்து வருகிறது. கோயிலுக்கு சொந்தமான நிலத்தில் அறுவடை செய்யப்படும் நெல் முழுவதும், அண்ணாமலையார் கோயில் அன்னதான திட்டத்திற்கு பயன்படுத்த உள்ளது குறிப்பிடத்தக்கது. திருவண்ணாமலை அடுத்த தனகோட்டிபுரம் கிராமத்தில் அண்ணாமலையார் கோயிலுக்கு சொந்தமான நிலத்தில் அறுவடை செய்த நெல்மணிகள் மலைபோல் உலர்களத்தில் கொட்டி வைக்கப்பட்டுள்ளது.
The post (தி.மலை) 18 ஏக்கரில் நெல் அறுவடை தீவிரம் அண்ணாமலையார் கோயிலுக்கு சொந்தமான appeared first on Dinakaran.