தயாரிப்பாளர் தில் ராஜு வீட்டில் சோதனை நிறைவு

2 weeks ago 4

ஐதராபாத்,

விஜய் நடித்த 'வாரிசு' மற்றும் ஷங்கர் இயக்கத்தில் ராம் சரண் நடித்த 'கேம் சேஞ்சர்' உள்ளிட்ட படங்களை தயாரித்தவர் தில் ராஜு. கடந்த 21-ம் தேதி காலை இவருக்கு தொடர்புடைய இடங்களில் வருமான வரித்துறையினர் சோதனை தொடங்கினர்.

ஐதராபாத்தில் உள்ள தில் ராஜுவின் வீடு, அலுவலகம் உள்ளிட்ட 8 இடங்களில் வருமான வரித்துறையினர் சோதனை நடத்தியதாக கூறப்படுகிறது. சுமார் 4 நாட்களாக நடந்த இந்த சோதனை இன்று நிறைவடைந்துள்ளது. இதில், முக்கிய ஆவணங்களை அதிகாரிகள் கைப்பற்றி இருப்பதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தில் ராஜு வீட்டில் சோதனை நிறைவுடோலிவுட் தயாரிப்பாளர் தில் ராஜு வீடு, அலுவலகத்தில் 4 நாட்களாக நடைபெற்ற ஐ.டி. சோதனையில் முக்கிய ஆவணங்கள் கைப்பற்றப்பட்டுள்ளதாக தகவல்#DilRaju #Raid #ITDepartment #ThanthiTV pic.twitter.com/WSPZI5sobO

— Thanthi TV (@ThanthiTV) January 25, 2025
Read Entire Article