சென்னை: தமிழ்நாட்டை வஞ்சிக்கும் மோடி அரசை கண்டித்து திமுக சார்பில் வரும் 8ம் தேதி கண்டன பொதுக் கூட்டம் நடக்கிறது. இதில் ஆவடியில் நடக்கும் பொதுக்கூட்டத்தில் முதல்வர் மு.க.ஸ்டாலின் கலந்து கொண்டு பேசுகிறார். திமுக சார்பில் ஒன்றிய அரசின் ஓரவஞ்சனையான நிதிப் பகிர்வு, தமிழ்நாட்டின் முக்கிய திட்டங்கள் புறக்கணிப்பு, தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலினின் தொடர்ச்சியான கோரிக்கைகளுக்குப் பிறகும் பேரிடர் மேலாண்மை ஆகியவற்றுக்கு நிதி ஒதுக்காதது, ஒன்றிய பட்ஜெட்டில் தமிழ்நாடு என்ற பெயரைக் கூட உச்சரிக்காதது என, தொடர்ந்து தமிழ்நாட்டை வஞ்சிக்கும் மோடி அரசைக் கண்டித்து வருகிற பிப்ரவரி 8ம் தேதி மாலை தமிழ்நாடு முழுவதும் அனைத்து திமுக மாவட்டங்களின் சார்பில் கண்டன பொதுக்கூட்டம் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டது.
இந்த பொதுக்கூட்டங்களில் பங்கேற்று உரை நிகழ்த்தும் சொற்பொழிவாளர்கள் பட்டியலை திமுக தலைமை கழகம் வெளியிட்டுள்ளது. அதன்படி திருவள்ளூர் மத்திய மாவட்டம் சார்பில் ஆவடியில் நடைபெறும் பொதுக்கூட்டத்தில் திமுக தலைவரும், தமிழ்நாடு முதல்வருமான மு.க.ஸ்டாலின் கலந்து கொண்டு உரையாற்றுகிறார். இதில் அமைச்சர் ஆவடி நாசர் உள்ளிட்டோர் கலந்து கொள்ள உள்ளனர்.
வேலூர் மாவட்டம் அணைக்கட்டில் நடக்கும் பொதுக்கூட்டத்தில் திமுக பொதுச்செயலாளர் துரைமுருகன், பி.நந்தகுமார் எம்எல்ஏ, கவிஞர் ஏ.ராஜசேகர் ஆகியோர் உரையாற்றுகின்றனர்.
சென்னை வடகிழக்கு மாவட்டம் மாதவரத்தில் நடக்கும் பொதுக்கூட்டத்தில் துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் கலந்து கொண்டு பேசுகிறார். இதில் மாதவரம் சுதர்சனம் எம்எல்ஏ, தஞ்சை கூத்தரசன் உள்ளிட்டோர் பங்கேற்கின்றனர். இதேபோல காஞ்சிபுரம் தெற்கு மாவட்டம் உத்திரமேரூர்- பொருளாளர் டி.ஆர்.பாலு, க.செல்வம் எம்பி, க.சுந்தர் எம்எல்ஏ. திருநெல்வேலி மத்திய மாவட்டம் பாளையங்கோட்டை- துணை பொதுச்செயலாளர் கனிமொழி எம்பி, டி.பி.எம்.மைதீன்கான், மதுரை குருசாமி.
திருச்சி மத்திய மாவட்டம் லாக்குடி- முதன்மை செயலாளர் கே.என்.நேரு, துணை பொதுச்செயலாளர் ஆ.ராசா எம்பி., வைரமணி. சென்னை தென்மேற்கு மாவட்டம் மயிலாப்பூர்- தயாநிதிமாறன் எம்பி, மாவட்ட செயலாளர் மயிலை த.வேலு எம்எல்ஏ, பசும்பொன் ரவிச்சந்திரன். சென்னை மேற்கு மாவட்டம் ஆயிரம் விளக்கு- அமைச்சர் கோவி.செழியன், மாவட்ட செயலாளர் சிற்றரசு, வாகை சந்திரசேகர். சென்னை தெற்கு மாவட்டம் சோழிங்கநல்லூர்-அமைச்சர் மா.சுப்பிரமணியன், தமிழச்சி தங்கப்பாண்டியன்,
செங்கை தாமஸ், குடந்தை பாஸ்கர். திருவள்ளூர் கிழக்கு பொன்னேரி- கனிமொழி என்.வி.சோமு எம்பி, டி.ஜெ.கோவிந்தராஜன் எம்எல்ஏ, சி.ஜெரால்டு, ஆவடி பாஸ்கர். திருவள்ளூர் மேற்கு மாவட்டம் திருத்தணி-ஜெகத்ரட்சகன் எம்பி,எஸ்.சந்திரன் எம்.எல்ஏ, வண்ணை புகாரி. காஞ்சிபுரம் வடக்கு மாவட்டம் செங்கல்பட்டு- அமைச்சர் தா.மோ.அன்பரசன், சபாபதி மோகன், தாயகம் கவி எம்எல்ஏ.
சென்னை வடக்கு மாவட்டம் ராயபுரம்- டாக்டர் கலாநிதி வீராசாமி எம்பி, ஆர்.டி.சேகர் எம்எல்ஏ, டாக்டர் எழிலன் எம்எல்ஏ. சென்னை கிழக்கு மாவட்டம் கொளத்தூர்-அமைச்சர் பி.கே.சேகர்பாபு, கவிஞர் மனுஷ்யபுத்திரன், உடுமலை தண்டபாணி ஆகியோர் கலந்து கொள்கின்றனர். இதே போல மற்ற மாவட்டங்களில் நடைபெறும் பொதுக்கூட்டத்தில் பங்கேற்போர் பெயர் விவரம் வெளியிடப்பட்டுள்ளது.
The post தமிழ்நாட்டை வஞ்சிக்கும் மோடி அரசை கண்டித்து திமுக சார்பில் வரும் 8ம் தேதி கண்டன பொதுக்கூட்டங்கள்: ஆவடியில் முதல்வர் மு.க.ஸ்டாலின், அணைக்கட்டில் துரைமுருகன், மாதவரத்தில் உதயநிதி பங்கேற்பு appeared first on Dinakaran.