டெல்லி: தமிழ்நாட்டுக்கு 3 நாட்கள் ஆரஞ்சு அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது. வங்கக் கடலில் கடந்த சில நாட்களாக நிலை கொண்டுள்ள வளி மண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக தென் மாவட்டங்களில் சில இடங்களில் கனமழை பெய்து வருகிறது. குறிப்பாக நீலகிரி, கோவை, திருப்பூர், ஈரோடு மற்றும் நாமக்கல் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் நேற்று மிக கனமழை பெய்தது. இதனிடையே தெற்கு ஆந்திரா- வட தமிழக கடலோரப் பகுதிகளை ஒட்டிய மத்திய மேற்கு -தென் மேற்கு வங்கக் கடல் பகுதகளின் மேல் ஒரு வளி மண்டல கீழடுக்கு சுழற்சி நிலை கொண்டுள்ளது.
இந்நிலையில் தமிழ்நாட்டுக்கு 3 நாட்கள் ஆரஞ்சு அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக வானிலை மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில்; தமிழ்நாட்டில் அடுத்த 3 நாட்கள் ஓரிரு இடங்களில் மிக கனமழைக்கு வாய்ப்பு உள்ளது. தமிழ்நாட்டில் இன்று முதல் 13-ம் தேதி வரை 7 நாட்கள் ஓரிரு இடங்களில் கனமழைக்கு வாய்ப்பு உள்ளது. கேரளாவில் இன்று முதல் 5நாட்கள் மிக கனமழைக்கான ஆரஞ்சு எச்சரிக்கை கொடுக்கப்பட்டுள்ளது. கர்நாடகாவில் இன்றும், நாளையும், மிக கனமழைக்கான ஆரஞ்சு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
அதற்கடுத்த 3 நாட்கள் கனமழைக்கான மஞ்சள் எச்சரிக்கையும் கொடுக்கப்பட்டுள்ளது இவ்வாறு குறிப்பிடப்பட்டுள்ளது.
The post தமிழ்நாட்டுக்கு 3 நாட்கள் ஆரஞ்சு அலர்ட்: வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை appeared first on Dinakaran.