சேலம்: சேலம் சூரமங்கலத்தில் மளிகை கடை தம்பதி மீது மர்ம நபர்கள் தாக்குதல் நடத்தியுள்ளனர். மர்மநபர்கள் தாக்கியதில் மளிகை கடை உரிமையாளர் பாஸ்கர் (65), மனைவி வித்யா (60) உயிரிழந்துள்ளார். தம்பதி மீது தாக்குதல் நடத்தி விட்டு தப்பிய மர்ம நபர்கள் குறித்து போலீஸ் விசாரணை நடத்தி வருகின்றனர்.
தனியாக வசிக்கும் முதியோரை கொலை செய்து, பணம், நகை போன்றவற்றை கொள்ளையடித்து செல்லும் சம்பவம் அதிகளவில் நடந்து வருகிறது. இதன் காரணமாக தோட்டத்து வீடுகளில் தனியாக வசிப்போர் மத்தியில் கலக்கத்தை ஏற்படுத்தியுள்ளது.
அந்த வகையில் சேலத்தில் கணவன், மனைவி ஆகியோரை மர்ம நபர்கள் கொலை செய்துள்ளனர். சேலம் மாவட்டம் ஜாகிர் அம்மாபாளையம் பகுதியை சேர்ந்தவர் பாஸ்கர்(65), மனைவி வித்யா(60) ஆகியோர் மளிகை கடை நடத்தி வந்தனர். அவர்கள் வழக்கமான பணியை மேற்கொண்டிருக்கும்போது திடீரென வீட்டிற்குள் நுழைந்த மர்ம நபர்கள் இருவரையும் வெட்டி விட்டு தப்பியோடினர்.
மர்ம நபர்கள் வெட்டியத்தில் பலத்த காயமடைந்த பாஸ்கர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லும் வழியில் வித்யா உயிரிழந்தார். இந்த சம்பவம் குறித்து தகவலறிந்த போலீசார், நகை மற்றும் பணத்திற்காக தம்பதியினர் கொல்லப்பட்டனரா?, முன்பகை காரணமாகவா? அல்லது வேறு ஏதேனும் காரணமா என்பது குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
மளிகை கடை நடத்தி வந்த தம்பத்தியினரை மர்ம நபர்கள் கொலை செய்த சம்பவம் அப்பகுதியில் பெரும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. கடந்த சில நாட்களுக்கு முன்னர் நர்ஸ் ஒருவர் கல்லால் அடித்து கொலை செய்யப்பட்ட சம்பவமும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
The post சேலம் அருகே மளிகை கடை நடத்தி வந்த தம்பதியினர் வெட்டி கொலை! appeared first on Dinakaran.