தமிழ்நாட்டு மக்களை நாகரிகமற்றவர்கள் என்று பேசிய ஒன்றிய அமைச்சர் தர்மேந்திர பிரதானுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் கண்டனம்

2 hours ago 1

சென்னை: தமிழ்நாட்டு மக்களை நாகரிகமற்றவர்கள் என்று பேசிய ஒன்றிய அமைச்சர் தர்மேந்திர பிரதானுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் கண்டனம் தெரிவித்துள்ளார். தமிழ்நாட்டுக்கு நிதி தராமல் ஏமாற்றும் நீங்கள், தமிழ்நாட்டு எம்.பி.க்களை நாகரீகமற்றவர்கள் எண்பதா..? என முதல்வர் கேள்வியெழுப்பியுள்ளார்.

இது தொடர்பான முதல்வரின் சமுக வலைதள பதிவில்;
தன்னை மன்னரென எண்ணிக் கொண்டு ஆணவத்துடன் பேசும் ஒன்றியக் கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதானுக்கு நாவடக்கம் வேண்டும். தமிழ்நாட்டின் நிதியைத் தராமல் ஏமாற்றும் நீங்கள் தமிழ்நாட்டு எம்.பி.க்களைப் பார்த்து அநாகரிகமானவர்கள் என்பதா? தமிழ்நாட்டு மக்களை அவமானப்படுத்துகிறீர்கள். பிரதமர் நரேந்திர மோடி இதனை ஏற்கிறாரா?

தன்னை மன்னரென எண்ணிக் கொண்டு ஆணவத்துடன் பேசும் ஒன்றியக் கல்வி அமைச்சர் @dpradhanbjp அவர்களுக்கு நாவடக்கம் வேண்டும்!

தமிழ்நாட்டின் நிதியைத் தராமல் ஏமாற்றும் நீங்கள் தமிழ்நாட்டு எம்.பி.க்களைப் பார்த்து அநாகரிகமானவர்கள் என்பதா?

தமிழ்நாட்டு மக்களை அவமானப்படுத்துகிறீர்கள்.… pic.twitter.com/wKQ7FhX3rj

— M.K.Stalin (@mkstalin) March 10, 2025

NEP, மும்மொழிக் கொள்கையைத் தமிழ்நாடு அரசு அனுப்பிய PM SHRI MoU முற்றிலுமாக நிராகரித்து விட்டது என எனக்குக் கடிதம் எழுதியது நீங்கள் தானே?

பிரதான் அவர்களே,
நாங்கள் மக்களின் எண்ணங்களுக்கு மட்டுமே மதிப்பளித்துச் செயல்படுகிறோம்! உங்களைப் போல நாக்பூரின் சொற்களுக்குக் கட்டுப்பட்டு அல்ல!! நாங்கள் உங்கள் திட்டத்தைச் செயல்படுத்த முன்வரவும் இல்லை, அப்படி முன்வராத என்னை யாரும் வற்புறுத்தவும் முடியாது. தமிழ்நாட்டு மாணவர்களுக்குரிய நிதியை, எங்களிடம் இருந்து வசூல் செய்த வரியை விடுவிக்க முடியுமா முடியாதா என்பதற்கு மட்டும் பதில் கூறுங்கள் என அவர் கூறியுள்ளார்.

The post தமிழ்நாட்டு மக்களை நாகரிகமற்றவர்கள் என்று பேசிய ஒன்றிய அமைச்சர் தர்மேந்திர பிரதானுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் கண்டனம் appeared first on Dinakaran.

Read Entire Article