சென்னை: தமிழ்நாட்டில் மருத்துவ படிப்புக்கான சிறப்பு கலந்தாய்வு நவ.25-ம் தேதி முதல் நடைபெறும் என மருத்துவக் கல்வி இயக்ககம் தெரிவித்துள்ளது. இது தொடர்பாக மருத்துவக் கல்வி இயக்ககம் வெளியிட்டுள்ள அறிக்கையில்; தமிழகத்தில் எம்.பி.பி.எஸ். மற்றும் பி.டி.எஸ். இளநிலை மருத்துவ படிப்புக்கான கலந்தாய்வு நான்கு கட்டமாக முடிவடைந்து இருக்கிறது. இதில் 6 எம்.பி.பி.எஸ். இடங்கள் மற்றும் 28 பி.டி.எஸ். இடங்கள் நிரப்பப்படாமல் காலியாக இருந்தது. அதேபோன்று ஸ்டான்லி மருத்துவ கல்லூரியில் இடம் தேர்வு செய்யப்பட்டு இருந்த மாணவர் உயிரிழந்ததை அடுத்து தமிழகத்தில் 7 எம்.பி.பி.எஸ். இடங்களும், 28 பி.டி.எஸ். இடங்களும் காலியாக இருப்பதாக மருத்துவ கல்வி இயக்ககம் தெரிவித்து இருக்கிறது.
அதேபோல தேசிய மருத்துவ ஆணையம் அன்னை மருத்துவ கல்லூரி, எம்ஜிஆர் மருத்துவ கல்லூரிகளுக்கு தலா 50 இடங்கள் கூடுதலாக ஒதுக்கி தேசிய மருத்துவ ஆணையம் உத்தரவு பிறப்பித்துள்ளது. 2 மருத்துவக்கல்லூரிகளுக்கு கூடுதல் இடங்கள் ஒதுக்கீடு செய்யப்பட்டதை அடுத்து அந்த இடங்களை நிரப்புவதற்கான சிறப்பு கலந்தாய்வு நடக்க உள்ளது. தமிழ்நாட்டில் காலியாக உள்ள மொத்தம் 135 மருத்துவ இடங்களுக்கு 25ம் தேதி சிறப்பு கலந்தாய்வு நடைபெற இருக்கிறது. அதேபோன்று இதற்கான கட்டுப்பாடுகளும் மருத்துவ கல்வி இயக்ககம் தரப்பில் இருந்து வெளியிடப்பட்டு இருக்கிறது.
The post தமிழ்நாட்டில் மருத்துவ படிப்புக்கான சிறப்பு கலந்தாய்வு நவ.25-ம் தேதி முதல் நடைபெறும்: மருத்துவக் கல்வி இயக்ககம் அறிவிப்பு appeared first on Dinakaran.