தமிழ்நாட்டில் நாளை மறுநாள் முதல் கனமழை பெய்யும்

5 hours ago 1

சென்னை: தமிழகத்தில் நாளை மறுநாள் முதல் கனமழை பெய்யத் தொடங்கும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. தென்கிழக்கு வங்கக் கடலில் இன்று ஒரு காற்றழுத்த தாழ்வுப் பகுதி உருவாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அது மேற்கு- வட மேற்கு திசையில் நகர்ந்து 25ம் தேதி காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெறும் வா்ய்ப்புள்ளது. அத்துடன், தெற்கு அந்தமான் கடல் பகுதிகளில் இருந்து மன்னார் வளைகுடா வரை ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சியும், தெற்கு கேரளா மற்றும் அதை ஒட்டிய பகுதிகளின் மேல் ஒரு வளி மண்டல கீழடுக்கு சுழற்சியும் நிலை கொண்டுள்ளது.

இந்த நிகழ்வுகளின் காரணமாக 26ம் தேதி கடலூர், தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை, புதுக்கோட்டை மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை முதல் மிக கனமழை பெய்யும். இது தவிர காஞ்சிபுரம், செங்கல்பட்டு, விழுப்புரம், ராமநாதபுரம், மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்யும் வாய்ப்புள்ளது. இதேநிலை 27 மற்றும் 28ம் தேதிகளிலும் நீடிக்கும் என்பதால் வட தமிழக கடலோர மாவட்டங்களிலும் மிக கனமழை பெய்யும். சென்னையில் பொதுவாக வானம் மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் சில இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யும்.

The post தமிழ்நாட்டில் நாளை மறுநாள் முதல் கனமழை பெய்யும் appeared first on Dinakaran.

Read Entire Article