ஊத்துக்கோட்டை அருகே அடையாளம் தெரியாத வாகனம் மோதி வாலிபர் பலி

5 hours ago 3

ஊத்துக்கோட்டை: ஊத்துக்கோட்டை அருகே அடையாளம் தெரியாத வாகனம் மோதியதில் வாலிபர் பரிதாபமக பலியானார். ஊத்துக்கோட்டை அருகே செஞ்சியகரம் அருந்ததியர் காலனியில் வசித்து வந்தவர் மணிகண்டன்(28). கூலி தொழிலாளி. இவரும் அதே பகுதியை சேர்ந்த 17 வயது சிறுவனான சந்தோஷ் என்பவரும் ஊத்துக்கோட்டையில் இருந்து செஞ்சியகரம் பகுதிக்கு பைக்கில் வந்து கொண்டிருந்தனர். ஊத்துக்கோட்டை ரெட்டி தெரு சர்ச் அருகில் சென்றபோது எதிரே வந்த அடையாளம் தெரியாத வாகனம் மணிகண்டனின் பைக் மீது மோதியது. இதில் இருவரும் தூக்கி வீசப்பட்டனர். இந்த விபத்தில் மணிகண்டன் படுகாயமடைந்து சம்பவ இடத்திலேயே பரிதாபமாக பலியானார். இதனைக் கண்டு அதிர்ச்சி அடைந்த பொதுமக்கள் படுகாயமடைந்த சந்தோஷை மீட்டு 108 ஆம்புலன்ஸ் மூலம் திருவள்ளூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து தகவல் அறிந்து வந்த ஊத்துக்கோட்டை போலீசார் இறந்த மணிகண்டனின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக திருவள்ளூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.விபத்தில் சிக்கி படுகாயமடைந்த சந்தோஷ் மேல்சிகிச்சைக்காக சென்னை ராஜிவ் காந்தி அரசு பொது மருத்துவமனக்கு அனுப்பிவைக்கப்பட்டார். இதுகுறித்து ஊத்துக்கோட்டை போலீசார் வழக்குப்பதிந்து விபத்தை ஏற்படுத்திய வாகனம் குறித்து விசாரித்து வருகின்றனர்.

The post ஊத்துக்கோட்டை அருகே அடையாளம் தெரியாத வாகனம் மோதி வாலிபர் பலி appeared first on Dinakaran.

Read Entire Article